கொல்லிகள் அடிச்சுவடு
  
Translated

கொல்லிகள் அடிச்சுவடு — அனைத்து மனித நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும் கொல்லிகளின் மொத்த அளவை எடுத்துச் சொல்வதற்கான ஒரு கருவி. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நேரடி மற்றும் மறைமுக நுகர்வையும் உட்படுத்தப்பட்டதாகும்.

 

"கொல்லிகளின் அடிச்சுவடு உலகெங்கிலும் உட்கொள்ளப்படும் கொல்லிகளின் மொத்த அளவைப் புரிந்துகொள்ள உதவும்.”[1]

 

"நாம் எவ்வாறு கொல்லிகள் அடிச்சுவடை குறைக்க முடியும்?"

Learning point

கொல்லிகள் அடிச்சுவடு என்றால் என்ன?

 

மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்படுத்தப்படும் கொல்லிகளின் அளவையும் சுற்றுச்சூழலில் அதன் மூலம் ஏற்படும் விளைவுகளையும் தெரியப்படுத்துவதற்கான உலகளாவிய கருவியாகக் கொல்லிகள் அடிச்சுவடு திகழ்கிறது.[1,2] கரியம் அடிச்சுவடுக்கும் கொல்லிகள் அடிச்சுவடுக்கும் இடையே கணிசமான ஒற்றுமை உள்ளது (வடிவம் 1). மக்கள் வாழ ஆற்றல் தேவை. ஆனால், அதிக ஆற்றலைப் பயன்படுத்துவதனால் தட்ப வெட்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல், உலகளவில் மக்களும் விலங்குகளும் நுண்ணுயிர்ப்பிணிகளுக்கு ஆளாகினால் கொல்லிகள் தேவைப்படுகிறது. கொல்லிகளை அளவுக்கு மீறியும் தவறாகவும் பயன்படுத்துவதால் கொல்லி எதிர்ப்பாற்றல் வளர காரணம் ஆகும். இதனால், காலப்போக்கில் மனித, விலங்கு மரணங்களின் எண்ணிக்கை உலகளாவிய நிலையில் அதிகரிக்கக் காரணமாகின்றன.[1]

 

ஒரு குறிப்பிட்ட நாட்டில் மனிதர்களாலும் விலங்குகளாலும் நுகரப்படும் கொல்லிகளின் மொத்த அளவை இணைப்பதன் மூலம் கொல்லிகள் அடிச்சுவடு மதிப்பிடப்படுகிறது (வடிவம் 2). விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கொல்லிகள் இந்த அடிச்சுவடில் ஒரு முக்கிய பகுதியாகும்.

 

ஏனெனில், விலங்குகளுக்குச் செலுத்தப்படுகின்ற பெரும்பாலான கொல்லிகள் கழிவுநீர் அமைப்புகள் மூலம் வெளியேறி சுற்றுச்சுழலை மாசுப்படுத்துகின்றன. பெரும்பாலும், விலங்குகளிருந்து வெளியான கொல்லிகள், நுண்ணுயிரிகளின் எதிர்ப்பாற்றல் வளர்ச்சிக்குத் துணைசெய்கின்றது.

 

கரியம் அடிச்சுவடு போலவே, அதிகாரப்பூர்வமான தரவுகளுடன் ஒவ்வொரு நாட்டின் கொல்லிகளின் பயன்பாட்டினைக் கொல்லிகள் அடிச்சுவடு மூலம் வழங்கலாம் (வடிவம் 3). இந்தத் தகவல்கள் கொள்கை வகுப்பாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமைகிறது.  உதாரணமாக, “அதிகாரப்பூர்வமான தரவுகள் இல்லாமல் எவ்வளவு கொல்லிகள் ஒரு நாட்டில் பயன்படுத்தப்படுகின்றது?” அல்லது தங்களுக்கு தெரியாமல் “மனிதர்களிடமும் உணவு உற்பத்தியிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் கொல்லிகளின் அளவு குறைக்கப்படுமா?’ என்று மக்கள் கேட்கலாம்.

 

 

வடிவம் 1: கரியம் அடிச்சுவடு (இடது) மற்றும் கொல்லிகள் அடிச்சுவடு (வலது).

 

வடிவம் 2: எடுத்துக்காட்டாகாக 2017இல் இங்கிலாந்து நாட்டில், கொல்லிகள் நுகர்வு அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓர்  அடிச்சுவடு.[2]

 

வடிவம் 3: கொல்லிகள் அடிச்சுவடுகளுக்கான எடுத்துக்காட்டுகள். 2015ஆம் ஆண்டில் நாடுகள் வாரியாக கொல்லிகள் பயன்பாடு  (மெட்ரிக் டன்).[2] கொல்லிகள் அடிச்சுவடுகள் பற்றி மென்மேலும் அறிய இவ்வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்படலாம்: www.antibioticfootprint.net

 

ஆதார நூற்பட்டியல்

[1]        டி. லிம்மத்துரோட்சக்குல், ஜே. ஏ. டி. சாண்டோ, டி. சி. பாரெட், எம். கோர்லி, எல். வை. ஹுசு, எம். மெண்டல்சன், பி. கோலிக்னான், ஆர். லக்ஷ்மிநாராயண், எஸ். ஜே. பீகொக், பி. ஹோவர்ட் (2019). கொல்லிகள் நுகர்வு குறைக்க உதவும் தகவல்தொடர்பு கருவியாக ‘கொல்லிகள் அடிச்சுவடு’. ஜர்னல் ஆண்டிமைக்ரோபியல் கீமோதெரபி.

D. Limmathurotsakul, J. A. T. Sandoe, D. C. Barrett, M. Corley, L. Y. Hsu, M. Mendelson, P. Collignon, R. Laxminarayan, S. J. Peacock, P. Howard (2019) ‘Antibiotic footprint’ as a communication tool to aid reduction of antibiotic consumption. Journal of Antimicrobial Chemotherapy. https://doi.org/10.1093/jac/dkz185

[2]        கொல்லிகள் அடிச்சுவடு. இவ்வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Antibiotic Footprint. Retrieved from http://www.antibioticfootprint.net/

 

Related words.
Word of the month
New word